கொரோனா வைரஸ்

இந்திய அளவில் 11,500-க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,36,133 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் 11,499 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4,29,05,844 என்று உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 0.28% என்றிருப்பதை தொடர்ந்து, இந்தியாவில் 1,21,881 பேர் சிகிச்சையிலிருக்கின்றனர். இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில், 23,598 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,22,70,482 என்றாகியுள்ளது. குணமடைவோர் விகிதம் 98.52% என்று உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 255 பேர் இந்தியாவில் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,13,481 என்றாகியுள்ளது. இறப்பு விகிதம், இந்தியாவில் 1.20% என்றுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 28,29,582 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட டோஸ்களின் முழு எண்ணிக்கை 1,77,17,68,379 என்றாகியுள்ளது.