தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
34 ஆவது நாளாக தமிழகத்தில் கோவிட் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று 1,090 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,075 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,21,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,075 ஆக உள்ளது. சென்னையில் நேற்று 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 139 ஆக குறைந்திருக்கிறது. 12 வயதிற்குட்பட்ட 76 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் இன்று 12 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,060 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 8 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 12,288ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,315 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,50,145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சென்னை 139, கோவை 125 என இரண்டு மாவட்டங்களில் மட்டுமே 100 க்கும் மேல் பதிவாகியுள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 1.7% தொற்று பதிவாகியுள்ளது. சென்னை 1% லிருந்து படிப்படியாகக் குறைந்து 0.7 க்கு வந்துள்ளது. ராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 0.3% என தொற்று பதிவு. குறைவாக கோவிட் உறுதியாகும் மாவட்டங்களாக இவை உள்ளன.