சினிமா

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விரைவில் வருகிறது யூடியூப் சேனல்

webteam

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூடியூப் சேனல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், திராவிட அரசியல் கட்சிகள் உட்பட பல கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்தும் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நடிகர் விஜய்யும் ஒருவேளை இந்த வரிசையில் இணைவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையான சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்‘ என்ற பெயரில்  கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். அதற்கு விஜய் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சந்திரசேகர் அந்த முயற்சியை கைவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை இந்தியா முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க முக்கிய அதிகாரிகள்,  விக்கிரவாண்டியில் ஆலோசனைக்கூட்டம் மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு யூடியூப் சேனலை தொடங்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த யூடியூப் சேனல் வாயிலாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை வெளிக்கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.