சினிமா

தனுஷ் கொடுத்த அன்புப்பரிசில் நெகிழ்ந்து போன யோகிபாபு

தனுஷ் கொடுத்த அன்புப்பரிசில் நெகிழ்ந்து போன யோகிபாபு

webteam

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் யோகி பாபு. கடந்த 5 ஆம் தேதி மஞ்சு பார்கவி என்பவருடன் யோகி பாபுவுக்கு திருமணம் நடந்தது. குடும்பத்தார் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் திரைநட்சத்திரங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் மட்டும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் திருமணம் முடிந்த பின்னர் தனது டப்பிங்கில் கவனம் செலுத்தி வந்தார் யோகிபாபு. இதனை தொடர்ந்து இன்று மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் படபடப்பிடிப்பில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். புதுமாப்பிள்ளையை உற்சாகமாக வரவேற்ற படக்குழுவினர் அவருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக நடிகர் தனுஷ் அவருக்கு தங்க சங்கிலி ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாரதா யோகிபாபு நெகிழ்ந்து போனார்.