மம்முட்டியின் ‘யாத்ரா’ ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் ரெட்டி. இவர் எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்றில் உயிரிழந்தார். அந்தச் சோகம் அம்மாநிலம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உள்ளது. அதில் ஒய்எஸ்ஆர் கேரக்டரில் நடிகர் மம்முட்டி நடிக்க இருக்கிறார். ரெட்டியின் மனைவியான விஜயம்மா பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை மகிராகவ் இயக்க உள்ளார். இதனை 70 எம் எம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு வரும் 9ம் தேதி முறையாக பூஜையுடன் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் மம்முட்டி அச்சு அசல் ஒய்எஸ்ஆர் ரெட்டியை போலவே இருக்கிறார். தற்சமயம் தெலுங்கு மொழியில் தயாராக உள்ள இப்படம் தமிழில் டப்பிங் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.