சினிமா

’விக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார்? தயாரிப்பாளர் விளக்கம்

’விக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார்? தயாரிப்பாளர் விளக்கம்

webteam

’விக்ரம் - வேதா’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம் என்று அந்தப் படத்தை தயாரித் துள்ள ஒய் நாட் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.

மாதவன், விஜய் சேதுபதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான படம், ‘விக்ரம் வேதா’. புஷ்கர் - காயத்ரி இயக் கிய இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்தார். சாம் சி.எஸ். இசையமைத்திருந்த இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் மற்றும் பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகியோருடன் இணைந்து சஷிகாந்த் தயாரிக்கிறார்.  ஹிர்த்திக் ரோஷ னும் சஞ்சய் தத்தும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் இந்தப் படம் ரீமேக் செய்யப்படுவதாகவும் அதில் பாலகிருஷ்ணா வும் டாக்டர் ராஜசேகரும் இணைந்து நடிப்பதாக வும் செய்திகள் வெளியாயின. இவர்கள் இருவரும் நடிப்பதால் தெலுங்கு சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தகவலை, அந்த படத்தை தயாரித்துள்ள ஒய் நாட் ஸ்டூடியோஸ் மறுத்துள்ளது. 

இதுபற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விக்ரம் வேதா’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை எங்களிடம் தான் உள்ளது. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவும் டாக்டர் ராஜசேகரும் நடிப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. தெலுங்கு ரீமேக் பற்றி, நாங்கள் அறிவிக்கும் வரை அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை மீடியா வெளியிட வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளது.