என் அம்மா சரிகாவுடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.
மும்பையில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருதி கூறும்போது, ’எனது அம்மாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நாங்கள் இருவரும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இணைந்து பணியாற்றுகிறோம். அப்பாவுடன் பலமுறை பணியாற்றி இருக்கிறேன். அம்மாவுடன் நடித்ததில்லை. நடிக்க ஆவலாக இருக்கிறேன்.
அவர்களுடன் என்னை ஒப்பிடுவதை ஏற்க முடியாது. இருவரும் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஒப்பீட்டை தவிர்க்க முடியாது என்பது தெரியும். இருந்தாலும் அவர்களுடன் என்னை ஒப்பிட முடியாது.
Read Also -> 'லொக்கேஷன்' வேட்டையில் இந்தியன் 2
சினிமா நிதானத்தை, பொறுமையை கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் யார் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. பல விஷயங்களை இழந்திருக்கிறேன். பிறகு அதை மீட்டிருக்கிறேன். ஒருவகையில் ஆசிர்வதிக்கப்பட்ட பெண்ணாக உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.