சினிமா

காமெடியில் ‘மெர்சல்’ காட்டும் வடிவேலு... ஈடுகொடுப்பாரா யோகிபாபு?

காமெடியில் ‘மெர்சல்’ காட்டும் வடிவேலு... ஈடுகொடுப்பாரா யோகிபாபு?

webteam

தோற்றத்திலும், கவுண்ட் கொடுப்பதிலும் கலக்கி வருகிறார் யோகிபாபு. இதனால் மிகக் குறைந்த நாட்களில் அதிக படங்களில் நடித்து காமெடியில் கலக்கி வருகிறார் அவர்.

விஜயின் மெர்சல் படத்திலும் யோகிபாபு வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். நொலா என்ற காமெடி கேரக்டரில் விஜய் சமந்தா வரும் சீன்களில் அசத்தி இருக்கிறாராம் அவர். இந்தப்படத்தில் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் முழு நீள காமெடியனாக நடித்து வருகிறார் வடிவேலு. விட்ட இடத்தை இந்தப்படத்தில் பிடித்தே ஆக வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் காமெடியில் கலக்கி இருக்கிறாராம் வடிவேலு. இவருடன் சத்யனும் காமெடி கூட்டணி அமைத்திருக்கிறார்.  இந்நிலையில் தற்போதைய படங்களில் தனி காமெடியனாக நடித்து வரும் யோகி பாபுவின் அசத்தல் எடுபடுமா? என எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. வடிவேலுவின் போர்சன் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது. 

80 சதவிகிதம் படமாக்கப்பட்டுள்ள மெர்சல் பட ஷூட்டிங் ஜூலையில் நிறைவடைகிறது. அட்லி இயக்கி வரும் இஅந்தப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.