சினிமா

இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்குமா பிரசாத் ஸ்டூடியோ? - உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

இசையமைப்பாளர் இளையராஜாவை ஒருநாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா? என பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதை எதிர்த்து இளையராஜ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது “பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் இருக்கின்றன. அதுபோன்ற நிலையில், ஒரு நாள் மட்டும் தியானம் மேற்கொள்ள இளையராஜா தரப்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அந்த அனுமதியை வழங்க முடியுமா என்று பிரசாத் ஸ்டுடியோ திங்கட்கிழமை பதிலளிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஒரு நாள் அனுமதி வழங்கி அவரது பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கும்பட்சத்தில் இந்த பிரச்னைக்கு சுமூக முடிவு எட்ட வாய்ப்புள்ளது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.