சினிமா

அஜித்துடன் 5 வது முறையாக இணைகிறாரா நயன்தாரா? மறுக்கிறது படக்குழு!

அஜித்துடன் 5 வது முறையாக இணைகிறாரா நயன்தாரா? மறுக்கிறது படக்குழு!

webteam

அஜித்துக்கு ஜோடியாக, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா 5 வது முறையாக  நடிக்கிறார் என்று வந்த தகவலைப் படக்குழு மறுத்துள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு, அஜீத் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் ஹெச்.வினோத். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த வருட இறுதியில் தொடங்குகிறது. இதில் அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் படங்களில் அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, ஐந்தாவது முறையாக இந்தப் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, ’ஹீரோயின் யாரென்று இன்னும் முடிவாகவில்லை. நயன்தாரா நடிப்பதாக எப்படி செய்தி வெளியானது என்றும் தெரியவில்லை. அவர் நடிக்கவில்லை என்பது உறுதி. வேறு ஹீரோயின்களிடம்தான் பேசிவருகின்றனர்’ என்று தெரிவித்தது.