சினிமா

பிக்பாஸில் சல்மான்கான் செய்த நல்ல விஷயம்: கமல்ஹாசனும் பின்பற்றுவாரா?

பிக்பாஸில் சல்மான்கான் செய்த நல்ல விஷயம்: கமல்ஹாசனும் பின்பற்றுவாரா?

sharpana

அக்டோபர் 3 ஆம் தேதி முதல் இந்தியில்  ’பிக்பாஸ் சீசன் 14’ நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இதைத்தொடர்ந்து அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் மாஸ்க் அணிந்திருக்கும் புதிய படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் உலகம் முழுக்க அதிகப் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது பிக்பாஸ்தான். இந்தியாவிலும் இந்நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் அதிகம். இந்தியில் 13 சீசன்கள் கடந்துள்ளதை வைத்தே, பிக்பாஸ்க்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பை புரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் இந்தியில் நாளை மறுநாள் துவங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் சல்மான் கான் மாஸ்க் அணிந்துகொண்டு வரும் புகைப்படத்தை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தமிழிலும் ‘பிக்பாஸ் சீசன் 4’ வரும் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. சல்மான்கான் மாஸ்க் அணிந்துகொண்டு வருவதுபோல கமல்ஹாசனும் அணிந்து வருகிறாரா? என்பது ஞாயிற்றுக்கிழமைதான் தெரியும். இந்தி பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவிலேயே சல்மான்கான் மாஸ்க் அணிந்திருந்தார். ஆனால்,  ப்ரோமோ வீடியோக்களில் கமல்ஹாசன் அணியவில்லை.

மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானே மாஸ்க் அணிந்துகொண்டு நிகழ்ச்சி நடத்துவதால் அதைப் பார்க்கும் பொதுமக்களும் பின்பற்றுவார்கள். மாஸ்க் குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.  இந்நிலையில், கமல்ஹாசன் எப்படி வருகிறார் என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே கமல்ஹாசன் நடித்து பிக்பாஸ் குறித்த 2 ப்ரோமோக்கள் வெளியிருந்தும் அதில் அவர் மாஸ்க் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.