சினிமா

பாகுபலியை கொன்றது ஏன்? ரகசியத்தை உடைத்த சத்தியராஜ்

பாகுபலியை கொன்றது ஏன்? ரகசியத்தை உடைத்த சத்தியராஜ்

Rasus

பாகுபலியை கொன்றது ஏன் என்ற கேள்விக்கான பதிலை கட்டப்பாவாக நடித்திருக்கும் சத்தியராஜ் கூறியிருக்கிறார்.

பிரபாஸ், ராணா தகுபதி, சத்தியராஜ் ஆகியோரின் நடிப்பில் ராஜமௌலி இயக்கியிருக்கும் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.

பாகுபலியின் முதல் பாகத்தில், ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் கேள்வி ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்’ என்பதுதான்.

இந்த நிலையில் ஐதரபாத்தில் பாகுபலி படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சத்தியராஜ் பேசினார். அப்போது அவர் “தயாரிப்பாளர்கள் சோபுவும் பிரசாத்தும் எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். அதன் பிறகு ராஜமௌலி பாகுபலியாக நடித்திருக்கும் பிரபாஸை கொல்ல சொன்னார். அதனால் கொன்றேன். இல்லையெனில், நான் ஏன் பிரபாஸை கொல்ல போகிறேன்?,” என்றார். 2003-ல் மிர்ச்சி என்ற படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்ததில் இருந்து அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சத்தியராஜ் கூறினார்.