சினிமா

"இசைத்துறையில் ஒழுக்கம்.. எனக்கு முன்னுதாரணமே இளையராஜாதான்!"- ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பேட்டி

"இசைத்துறையில் ஒழுக்கம்.. எனக்கு முன்னுதாரணமே இளையராஜாதான்!"- ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பேட்டி

webteam

‘99 சாங்ஸ்’  படத்தின் மூலமாக கதை ஆசிரியராக அறிமுகமாகியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், 'புதிய தலைறை' நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து...

கதையாசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது வந்தது?

"நான் வித்தியாசமான பாடல்களை தர விரும்பினேன். அதற்காகத்தான் இந்த முயற்சி. முதலில் எனக்கு இது மிக எளிமையான ஒன்றாகப்பட்டது. ஆனால் அதற்காக நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அதன்பின்னர்தான் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ண மூர்த்தியை சந்தித்தேன். பல தேர்வுமுறைகளுக்கு பிறகு இஹான் உள்ளே வந்தார்."

தயாரிப்பாளர் ரஹ்மானை, கதாசிரியர் ரஹ்மான் திருப்திப்படுத்தி விட்டாரா?

"இந்தப் பயணத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நாங்கள் நினைத்ததுபோலவே படத்தை எடுத்துவிட்டோம். இதில் பெருமைதரக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்திய கலைஞர்களை வைத்து இந்தத் தரத்தில் படத்தை எடுத்தது. அது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது." 

‘99 சாங்ஸ்’ திரைப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரியவாய்ப்பு இருக்கிறதா?

"எனது அம்மாதான் நான் இசையமைப்பாளராக மாறவேண்டும் என முடிவெடுத்தார். அப்போது நான் படிக்கவில்லை என்றால் யார் நம்மை மதிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் இசைத்துறைக்கு வந்த பின்னர் அவற்றையெல்லாம் மறந்துவிட்டேன். இந்த சமூகத்தில் இசைக்கல்வியை இராண்டாவது ஆப்ஷனாக வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். காரணம் இசைத்துறைக்குள் நுழைந்தால் தவறான பழக்கவழக்கங்களில் சிக்கிக்கொள்வார்கள் என அஞ்சுகின்றனர்.

அந்த விஷயத்தில் எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர் இளைராஜாதான். அவரின் ஒழுக்கத்திற்கு பிறர் கொடுக்கும் மரியாதை என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் எனது பள்ளியில் படிப்பவர்களும் இசைத்துறைக்கு மரியாதை ஏற்படுத்தும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்."

முழுமையான பேட்டியை காண >>