சினிமா

’2.ஓ’-வில் என்னைதான் ஹீரோவாக நடிக்கச் சொன்னார் ரஜினி: ஆமிர்கான்

’2.ஓ’-வில் என்னைதான் ஹீரோவாக நடிக்கச் சொன்னார் ரஜினி: ஆமிர்கான்

webteam

’2.ஓ’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்னைதான் ஹீரோவாக நடிக்கச் சொன்னார் என்று இந்தி நடிகர் ஆமிர் கான் சொன்னார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ’சில வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. பேசினேன். அப்போது ரஜினிகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். ’டைரக்டர் ஷங்கர் உருவாக்கி இருக்கும் ’2.ஓ’ கதை பிரமாதமாக இருக்கிறது. இதில் நீங்கள் நடிக்க வேண்டும். முதலில் கதையை கேளுங்கள்’ என்று சொன்னார் ரஜினி. அவர் மற்றும் டைரக்டர் ஷங்கரின் பெரிய ரசிகன் நான். ஷங்கர் என்னிடம் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அவர் கதையை விவரிக்கும்போது, அந்த கேரக்டரில் நான் என்னை பார்க்கவில்லை. ரஜினியைதான் பார்த்தேன். அவர்தான் என் கண்முன் வந்தார். இதை ஷங்கரிடம் சொன்னேன். இந்தக் கதையில் ரஜினி சார் மட்டுமே நடிக்க முடியும். வேறு யாரும் நடிக்க முடியாது என்றேன். இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும்’ என்றார்.