சினிமா

நடிகர் சங்கத் தேர்தலில் யார் யார் போட்டி..?

நடிகர் சங்கத் தேர்தலில் யார் யார் போட்டி..?

Rasus

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியிலும், சுவாமி சங்கர தாஸ் அணியிலும் யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளா‌ளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு பூச்சிமுருகன் மற்றும் கருணாஸும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களுக்கு கோவை சரளா, பிரசன்னா, சிம்ரன், ‌பசுபதி, நந்தா, ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, அஜய் ரத்னம், பிரேம், பிரகாஷ், சோனியா போஸ், தளபதி தினேஷ், ஜூனியர் பாலையா, ஹே‌மா, குஷ்பூ, லதா, நிதின் சத்யா, பருத்திவீரன் சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி காரைக்குடி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சுவாமி சங்கர தாஸ் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜூம், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு உதயா மற்றும் குட்டிபத்மினியும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு பூர்ணிமா பாக்யராஜ், காயத்ரி ரகுராம், பரத், ஸ்ரீகாந்த், சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.