மில்லர் - அயலான் - மிஷன் சாப்டர் 1
மில்லர் - அயலான் - மிஷன் சாப்டர் 1 X
சினிமா

குருவை மிஞ்சிவிட்டாரா சிஷ்யன்?: அயலான் Vs கேப்டன் மில்லர் Vs மிஷன் சாப்டர் 1; பொங்கல் வின்னர் யார்?

யுவபுருஷ்

கேப்டன் மில்லர்:

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ முதலிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆனது. பீரியட் படமாக உருவான இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்திருந்தார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஜெயிலர் படம் போல் இதிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

கேப்டன் மில்லர்

இந்தப் படத்திற்கு துவக்கம் மற்ற படங்களை விட சிறப்பாக இருந்தது. தனுஷின் நடிப்பும், ஜி.வி.பிரகாஷ்ராஜின் மிரட்டலான இசையும், முதல் பாதியின் அசத்தலான மேக்கிங்கும் வரவேற்பை பெற்றது. ஆனால், துப்பாக்கிக் காட்சிகள் சலிப்பூட்டும் வகையில் இருந்ததாலும் திரைக்கதையிலும் பெரிய அளவில் புதுமை இல்லாததால் பொங்கலுக்கு பிறகு கூட்டம் வெகுவாக குறையத் தொடங்கியது.

அயலான்:

2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் ஆர்.ரவிக்குமார். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’ நீண்ட காத்திருப்புக்கு பின்னர் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதுவும் கடைசி நேர சிக்கல்களை கடந்துதான் திரைக்கே வந்தது. ஏலியனை மையமாக கொண்ட இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுவும் படம் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு என்று குழந்தை ரசிகர் பட்டாளம் உண்டு. அதனால், இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று தியேட்டரில் கூட்டத்தை கூட்டி வந்தது.

அயலான்

ஆனால், படத்தில் முதல் பாதி இருந்த அளவிற்கு இரண்டாம் பாதி இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. முதல் பாதியின் சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதி பாதித்ததால் மெகா ஹிட் ஆக உருவெடுக்கவில்லை. ஆனால், முதல் நாளில் கேப்டன் மில்லர் உடன் பின் தங்கிய நிலையில் இருந்த அயலான் பின்னர் ஜெட் வேகத்தில் முன்னேறியது.

மிஷன் - சேப்டர் 1

மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ஏஎல் விஜய். நீண்ட காலமாக சரியான வெற்றிக்காக காத்திருந்தார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள மிஷன் சாப்டர் 1 பொங்கல் பண்டிகையையொட்டி கேப்டன் மில்லர், அயலான் உடன் மோதியது. இந்த படத்திற்கு முதலில் அச்சம் என்பது இல்லை என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்பு பான் இந்தியா வெளியீட்டிற்காக தலைப்பை மாற்றினர். இந்த படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா, பரத் போபன்னா, பேபி இயல் போன்றோர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விமர்சன ரீதியாக இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மிஷன் சாப்டர் 1

ஆனால், தொடக்கத்தில் போதுமான புரமோஷன் இல்லாததாலோ என்னவோ சரியான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அருண் விஜய் அசத்தலான நடிப்பிற்காக படத்திற்கு கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. 10 நாட்கள் முடிவில் படத்திற்கு சராசரியாக மக்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

வசூலில் வெற்றியாருக்கு? விவரம்!

கேப்டன் மில்லர்:-

முதல் நாள் நிலவரத்தை பார்த்தால் பொங்கல் பண்டிகைக்குள் கேப்டன் மில்லர் 100 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாளில் 10 கோடி ரூபாய் வரை வசூல் ஆனதாக கூறப்பட்டது. ஆனால், பின்னர் கலவையான விமர்சனங்களால் வசூல் சற்றே சரியத் தொடங்கியது. பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதினாலும் அதன் பிறகு கூட்டம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றே கூறப்படுகிறது. 10 நாட்கள் முடிவில் சுமார் 89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன் மில்லர்

அயலான்:-

முதல் நாளில் கேப்டன் மில்லரை விட பின் தங்கி இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பியது அயலான். பேமிலி ஆடியன் கூட்டம் பொங்கல் பண்டிகையில் அலைமோதியது. இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு பின் கூட்டம் அப்படியே சரிந்தது. 10 நாட்கள் முடிவில் சுமார் 91 கோடி ரூபாயை அயலான் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயலான்

மிஷன் சாப்டர் - 1:-

போதுமான திரையரங்குகள் கிடைக்காத நிலையில் விமர்சனங்கள் மூலம் கூட்டத்தை திரையரங்குகளுக்கு இழுத்தது மிஷன். 10 நாட்கள் முடிவில் 25-30 கோடிகள் வரை மிஷன் சேப்டன் 1 வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மிஷன் சாப்டர் 1

முதல் இடத்தில் தற்போதைக்கு அயலான் படம் இருப்பதாக கூறப்பட்டாலும், கேப்டன் மில்லர் படமும் கிட்டத்தட்ட அதே அளவில் தான் வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தடம் பதிக்க அவரது ஆரம்ப நாட்களில் தனுஷும் உதவியாக இருந்துள்ளார். 3 படத்தில் நடிக்க வைத்தது. செந்தில் குமாரை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்தது என தனுஷ் அவரது வாழ்வில் ஒரு படியாக இருந்துள்ளார். அதன் பின் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள் இடையே போட்டியும் உருவானது. அந்த வகையில் குருவான தனுஷீன் பட வசூலை சிவகார்த்திகேயன் மிஞ்சி விட்டாரா என்பதை இரு படங்களின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்

அத்துடன், இந்த வாரம் புதிய படங்கள் நிறைய வரவுள்ளதாக அடுத்த சில நாட்கள் வசூல் தான் யார் வின்னர் என்பதை முடிவு செய்யலாம்.