ஒரு திரைப்படத்தில் ஹீரோவின் ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்கும்போது, அந்தக் காட்சிகளில் உண்மையில் அந்த நடிகரே நடித்திருக்கிறார் என நம்பும்படி தத்ரூபமாக இருக்கும். இதற்கு முதன்மைக் காரணம், அந்த நடிகருக்கு Body Double-ஆக இயங்கும் கலைஞர்களே. குறிப்பாக, ஆபத்தான சண்டைக் காட்சிகள், வேகமான மூவ்மென்ட்கள், நீண்ட ஷாட்கள் போன்றவற்றில் Body Double எனப்படும் டூப் கலைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
அப்படிப்பட்ட Body Double மற்றும் Stunt Performer ஆக தென்னிந்திய சினிமாவில் தற்போது கவனம் பெற்றிருப்பவர் லோகேஷ் ஷர்மா, ரசிகர்கள் மத்தியில் ’ஷங்கி ஷர்மா’ என்று அறியப்படுபவர். சமீபத்தில் யாஷ் நடித்த Toxic படத்தின் மூலம் அவரது பெயர் மீண்டும் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ’GOAT’ திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் ஷங்கி ஷர்மா பணியாற்றியுள்ளார். குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற ஜீவன் பாத்திரத்தில் நடித்த விஜய்க்கு, மெட்ரோ ஃபைட் காட்சிகளில் அவர் Body Double-ஆக இவர் நடித்துள்ளார். அந்தக் காட்சிகள் தொடர்பான Behind-the-Scenes புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ஷங்கி ஷர்மா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இளம் விஜய் தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காட்சிகளில் உடல் அசைவுகள், சண்டை மூவ்மென்ட்கள் போன்றவற்றை சரியாகக் கொண்டுவர Body Double-ன் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
விஜயின் ’GOAT’ மட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’Coolie’ படத்திலும் ஷங்கி ஷர்மா பணியாற்றியிருக்கிறார். ’Coolie’ படத்தின் கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சியில் நாகார்ஜுனாவுக்கு Body Double-ஆக அவர் நடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதன்மூலம் விஜய், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் இடம்பெறும் பிரம்மாண்ட படங்களின் ஆக்ஷன் பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு கிடைத்துள்ளது. ஷங்கி ஷர்மாவின் பெயர் தற்போது அதிகமாக பேசப்படுவதற்கு முக்கியக் காரணம், Yash நடிப்பில் சமீபத்தில் வெளியான Toxic: A Fairy Tale for Grown-Ups. இந்தப் படத்தில் யாஷின் இளவயது பாத்திரமான ‘Ticket’ கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள ஆக்ஷன் காட்சிகளில் அவர் Body Double-ஆக பணியாற்றியுள்ளார். குறிப்பாக, Yash மற்றும் Ticket கதாபாத்திரத்துக்கு இடையிலான முக்கியமான சண்டைக் காட்சிகளில் ஷங்கி ஷர்மா நடித்துள்ளார். Yash உடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றியும், இந்த வாய்ப்பை வழங்கிய Yash, இயக்குநர் Geetu Mohandas மற்றும் Toxic படக்குழுவினருக்கும் ஷங்கி ஷர்மா தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
திரையில் ஹீரோவின் முகத்தை நாம் பார்க்கலாம். ஆனால் அந்த ஹீரோவின் ஆபத்தான சண்டைக் காட்சிகளுக்குப் பின்னால், தங்களது உடலையும் திறமையையும் கொடுத்து அந்தக் காட்சியைச் சாத்தியமாக்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், விஜய், ரஜினி, யாஷ் என மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன் இணைந்திருக்கும் ஷங்கி ஷர்மாவின் பெயர், இனி தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் Body Double உலகில் கவனிக்க வேண்டிய பெயராக மாறியுள்ளது.