சினிமா

மீண்டும் அஜித்துக்கு இவர்தான் வில்லனா?

மீண்டும் அஜித்துக்கு இவர்தான் வில்லனா?

webteam

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தில் நயன்தாரா கதநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். அது மட்டுமின்றி யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகிய பல நட்சதிரங்கள் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். மேலும், இதில் அஜித்துக்கு நிகராக நடிப்பதற்கு அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. 

                                  
 
ஏற்கனவே, வெங்கட் பிரபு இயக்கத்தில்‘மங்காத்தா’படத்தில் அஜித்தும் அர்ஜுனும் இணைந்து  நடித்துள்ளனர். இந்த காம்பினேசன் அஜித்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட, மீண்டும் ‘விசுவாசம்’ படத்தில்   அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்கக்கூடும் என செய்தி வெளியாகியுள்ளது.  இதனாலேயே சிவா தற்பொழுது ‘விசுவாசம்’ படத்தில் அர்ஜுனை வில்லனாக தேர்வு செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 
 
இதற்கு இன்னும் அர்ஜுன் பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்தப் படம் ‘வீரம்’போன்று குடும்ப சென்டிமென்ட் நிறைந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.