சினிமா

டாக்டர் பட டீஸர் வெளியீடு எப்போது?

webteam

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் டீஸர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தை  ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, தெலுங்கில் வெளியான கேங்ஸ்டர் படத்தில் பிரபலமான நடிகை பிரியங்கா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் வினய், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் இந்தப் படத்திலிருந்து டிக் டாக் தடை குறித்த பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் டாக்டர் படத்தின் டீஸர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.