சினிமா

அஜீத்துக்கு கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த வாக்குறுதி!

அஜீத்துக்கு கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த வாக்குறுதி!

webteam

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இரண்டும் இந்த வருடம் ரிலீஸ் ஆகிவிடும் என்பது அவர் நம்பிக்கை. ஒன்று தனுஷ் நடித்துள்ளா, ’என்னை நோக்கி பாயும் தோட்டா’. மற்றொன்று விக்ரம் நடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’.

‘ரெண்டு படமும் முடிஞ்சுப் போச்சு. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துட்டிருக்கு. யாரும் வேணும்னே படத்தை தாமதப்படுத்த மாட்டாங்க. ’என்னை நோக்கிப் பாயும் தோட்டோ’ படத்துல ஒவ்வொரு ஃபிரேமும் அழகா இருக்கும். பாடல்களும் சூப்பரா வந்திருக்கு. ரசிகர்கள் ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. விரைவில் படம் ரிலீஸ் ஆகும்’ என்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன். 

அடுத்து, அவரது லிஸ்ட்டில், ’காக்க காக்க’ இரண்டாம் பாகமும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகமும் இருக்கிறது. 

(என்னை நோக்கி பாயும் தோட்டா)

‘ஆமா. அடுத்து சூர்யாவோட ஒரு படம் பண்ணப் போறேன். அது, ’காக்க காக்க 2’ஆகவும் இருக்கலாம். ’என்னை அறிந்தால்’ இரண்டாம் பாகம் படமும் இருக்கு. அதுக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் போயிட்டிருக்கு. அஜீத்துகிட்ட, ’அடுத்த முறை பார்க்கும்போது, முழு ஸ்கிரிப்டோட வர்றேன்’ன்னு சொல்லிருக்கிறேன். அதனால அதுக்கான வேலை போயிட்டிருக்கு’ என்கிறார் கவுதம்.

ஏற்கனவே, ராம் சரண் தேஜாவுடன் ஒரு தெலுங்கு படம், மலையாள படம் ஒன்று, விண்ணைத் தாண்டி வருவாயா 2 என பல அறிவிப்புகள் கவுதமிடம் இருந்து வந்திருக்கிறது. இதெல்லாம் எப்போது நடக்குமோ?