சினிமா

3 மணி நேரம் மண்ணிற்குள் புதைந்து கிடந்த நடிகை!

3 மணி நேரம் மண்ணிற்குள் புதைந்து கிடந்த நடிகை!

webteam

பாலிவுட்டில் இயக்குநர் குஷன் நந்தி இயக்கத்தில் பாபுமொஷாய் பண்டூக்பாஸ் படத்தை இயக்கி வருகிறார். 
த்ரில்லர் படமான இந்தப் படத்தில் சித்ரங்காடா சிங், நவாஷுதின் சித்திக், ரூபா கங்குலி ஆகியோர்  நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் திவ்யா தத்தாவும் நடித்து வருகிறார். அவர் இடம்பெற்ற காட்சிகளின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. 
அவர் உடல் முழுவதையும் மண்ணிற்குள் புதைத்து தலை மட்டும் மேலே இருக்கும் வகையில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக லக்னோவில் உள்ள ஒரு வயல் வெளியில் கடும் வெயிலில், திவ்யா தத்தா உடல் முழுவதையும் புதைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியில் வைத்து மூன்று மணி நேரம் இருந்தார். அந்தக் காட்சிகள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எடுக்கப்பட்ட பிறகு அவர் வெளியேறினார். அதிக நேரம் மண்ணிற்குள் நடிகை உடலை புதைத்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தப்படம் ஆகஸ்டு மாதம் வெளியாக இருக்கிறது.