பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஒரு கணவனாக, தான் ஒரு மோசமான பழக்கத்தை கொண்டிருந்ததாக முன்பு காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அக்ஷய்குமார் தனது திருமணத்தின்போது மிகவும் பிசியாக படப்பிடிப்புகளில் இருந்ததாகவும், அப்போது ரசிகர்களின் ஆரவாரமும் அதிகமாக இருந்தது என்றாலும், அந்த காலக்கட்டத்தில் மிகவும் சோதனைகளை கடந்திருக்கிறேன் என்று அக்ஷய்குமார் கூறியுள்ளார்.
காஃபி வித் கரணில், அக்ஷய் குமார் தான் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியதும் முதலில் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதுதான் தனது மோசமான பழக்கம் என்று கூறியுள்ளார். "நான் 6.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பியதும் பைஜாமாவை மாற்றிக்கொண்டு விளையாட்டு போட்டிகளை பார்க்க ஆரம்பித்துவிடுவேன். இது என் மோசமான பழக்கம்" என்று அவர் கூறுகிறார்
உண்மையில், அக்ஷய்குமார் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதை மிகவும் விரும்புபவர், மனைவி ட்விங்கிளின் புத்தக வெளியீட்டின்போது கூட கிரிக்கெட் போட்டிகளை பார்க்காமல் அவரால் இருக்க முடியவில்லை. "புத்தக வெளியீட்டுக்காக என் மனைவி அங்கு இருந்தபோது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. கிரிக்கெட் மற்றும் விளையாட்டுகளைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தக வெளியீட்டு விழாவில் அவள் பேசும்போது, நான் ஸ்கோரைப் பார்த்தேன், நான் ஸ்கோரைப் பார்க்கிறேன் என்று அவளுக்குத் தெரியும். அதுவே எனது மோசமான பழக்கம், ”என்றார்.