ரஜினி - கூலி web
சினிமா

'கூலி'யின் பத்து நாள் கலெக்ஷன்.. லியோ - கூலி எது முதலிடம்?

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகியிருக்கும் கூலி திரைப்படம் முதல் வாரத்தில் நல்ல வசூலை பெற்றுள்ளது.

PT WEB

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான படம் `கூலி'. ஆகஸ்ட் 14 வெளியான படம் பத்து நாட்களை கடந்து, நல்ல வசூலையும் பெற்றுள்ளது. படத்தின் பத்து நாள் வசூல் அதாவது ஆகஸ்ட் 23 வரையிலான வசூல் என்ன என இப்போது பார்க்கலாம்.

கூலி ஏ சான்றிதழ் பெற்ற போதிலும் இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் அனைத்தையும் முறியடித்து உலக அளவில் 151 கோடி வசூலித்து முதல் இடத்தை பிடித்தது கூலி. இந்திய அளவில் கூலி முதல்நாள் வசூல் 65 கோடி வசூலை பெற்றது. அதனைத் தொடர்ந்து படம் வெளியான நான்காம் நாள் உலக அளவில் 404 கோடி வசூலித்து சாதனை படைத்தது எனவும் அறிவித்தது தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ். படத்தின் பத்தாம் நாள், அதாவது ஆகஸ்ட் 23ம் தேதி படத்தின் வசூல் இந்திய அளவில் 10 கோடி. கடந்த புதன்கிழமை 7.5 கோடியும், வியாழக்கிழமை 6.15 கோடியும், வெள்ளிக்கிழமை 5.85 கோடியும் எனக் குறைந்த வசூல் சனிக்கிழமை நன்றாகவே அதிகரித்திருக்கிறது.

ரஜினியின் கூலி திரைப்படம்

கூலியின் முதல் வார வசூல், 229.65 கோடியாக இருந்த நிலையில் பத்து நாட்களின் இறுதியில் 245.50 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் இரண்டாம் வார இறுதிக்குள் 250 கோடியை எட்டும் என சொல்லப்படுகிறது. உலக அளவில் முதல் நாள், நான்கு நாள் கலெக்ஷன் என்பதில் முன்பே சொன்னபடி முதல் இடத்தில் இருப்பது ரஜினியின் கூலி தான். போலவே இந்திய அளவில் லியோவின் முதல் நாள் கலெக்ஷன் 64.8 கோடி, கூலியின் முதல் நாள் கலெக்ஷன் 65 கோடி. அதிலும் கூலியே முன்நிலை.

லியோவா? கூலியா? எது முதலிடம்!

ஆனால் தொடர் ஓட்டம் என்பதை ஒப்பிடும் போது தற்போதைக்கு முன்னிலை லியோவுக்கு தான். காரணம் கூலி படத்தின் பத்து நாள் இந்திய கலெக்ஷன் 245.50 கோடி. அதுவே லியோவின் இந்திய வசூல் 1 வாரத்தில் 264.25 கோடி. இது தற்போதைய நிலைதான். கூலிக்கு இன்னும் காலம் இருக்கிறது.

லியோ திரைப்படத்தின் வசூல்

எனவே தற்போதைய நிலையை வைத்து எது முதலிடம் எனக் கணக்கிட முடியாது. லியோவின் ஒட்டு மொத்த இந்திய கலெக்ஷன் 341.04 கோடி, உலக அளவிலான கலெக்ஷன் 605.9 கோடி இதனை கூலி முந்துமா என்பதை பொறுத்தே இரண்டில் எது முதல் இடம் என்பது முடிவாகும்