அனிமி கலாச்சாரம் இப்போது தமிழ்நாட்டிலும் பெரிய கூட்டத்திற்கு சென்று சேர்ந்துள்ளது. வெப் சீரிஸ்களில் அனிமி சீரிஸ்களை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், இப்போது அதனை மையமாக வைத்து வெளியாகும் படத்திற்கும் திரையரங்குகளில் பெரிய வரவேற்பை கொடுக்கிறார்கள். அப்படி நாளை வெளியாக உள்ள `Demon Slayer: Kimetsu no Yaiba Infinity Castle' படத்திற்கு ஆல்ரெடி டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டன.
`Demon Slayer: Kimetsu no Yaiba' என்பது Koyoharu Gotouge எழுதிய ஜப்பானிய மாங்கா (காமிக்ஸ்) சீரிஸ். Tanjiro Kamado என்ற 13 வயது சிறுவன் குடும்பத்திற்காக பழிவாங்கவும் டீமனாக மாறிவிட்ட தன் தங்கை Nezukoஐ மீட்கவும் கிளம்புகிறான் என்பதே இந்தக் கதையின் மையம். இந்தக் கதை 205 சாப்டர்கள் காமிக்ஸ் ஆக எழுதப்பட்டுள்ளது. உலக அளவில் பெஸ்ட் செல்லர் காமிக்ஸ் ஆக இருக்கும் இதனை, Ufotable என்ற அனிமேஷன் ஸ்டுடியோ 2019ல் அனிமி சீரிஸ் ஆக மாற்றியது. நான்கு சீசன்களில் மொத்தம் 63 எபிசோட்களாக வெளியானது இந்த சீரிஸ்.
இதனை திரைப்படமாகவும் உருவாக்க முடிவு செய்த Ufotable அனிமேஷன் ஸ்டுடியோ, `Demon Slayer: Kimetsu no Yaiba – The Movie: Mugen Train' என்ற படத்தை 2020லும், `Demon Slayer: Kimetsu no Yaiba – To the Swordsmith Village' 2023லும், `Demon Slayer: Kimetsu no Yaiba – To the Hashira Training' 2024லும் வெளியிட்டது. மூன்று படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து இந்தப் பட வரிசையில் அவர்கள் திட்டமிட்டது தான் மூன்று பாகங்களாக உருவான 'Infinity Castle'. இந்த trilogy, நான்கு பாகங்களாக வெளியான Demon Slayer அனிமியின் சீக்குவலாகவும், படங்களாக நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பாகமாகவும் தயாரானது.
மேலும் இந்த trilogy, ஒட்டு மொத்த Demon Slayer கதைக்கான முடிவாகவும் இருக்கும் என சொல்லப்பட்டது. Infinity Castle முதல் பாகம் Demon Slayerன் பலத்தையும், தியாகத்தையும் காட்டியது, இரண்டாம் பாகம் கதையின் முதன்மை வில்லனான Muzan Kibutsujiன் பலத்தையும், அவன் யுத்தத்திற்கு தயாரானதையும் காட்டியிருந்தார். இப்போது வர இருப்பது Infinity Castle மூன்றாவது மற்றும் கடைசி பாகம். இந்த பாகத்தில் ஹீரோ Tanjiro Kamado தலைமையிலான Demon Slayes மற்றும் Muzan Kibutsuji இடையேயான யுத்தமே கதைக்களம்.
இந்த பாகத்தை பார்க்க ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்கில் காத்திருக்கிறார்கள். உலகம் எங்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் உண்டு என்றாலும் தற்போது இந்தியா, இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பல்கி பெருகிவிட்டனர். இந்தக் கதை நம் ஊர்களிலும் ஹிட்டாக முக்கியமான காரணம், குடும்பம், தியாகம், மீட்டெடுப்பது என இந்திய தன்மையிலான பல விஷயங்கள் இருப்பது. அது இங்கிருப்பவர்களை கவர முக்கிய காரணம்.
மிகத்தரமான அனிமேஷன் காட்சிகள், வலிமையான சண்டைகள், போன்றவை அனைத்து வயதினரையும் கவர்ந்திருக்கிறது. மிகத்தீவிரமாக இந்தியாவில் வளர்ந்துவரும் அனிமி கலாச்சாரமும் இவை பரவலாவதற்கு முக்கிய காரணம். சமூக வலைத்தளங்களில் இதற்கான ரசிகர்கள், தங்கள் கருத்துக்களை பகிர்வதும், இந்த அனிமி பிரபலமானதற்கு முக்கிய காரணம். இவற்றுக்கு மேல் இன்னொரு காரணியும் உண்டு. ஜப்பானிய மொழியில் உருவான சீரிஸ் என்றாலும், சமீபமாக பல அனிமி சீரிஸ்கள் தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்போது இந்த Demon Slayer படமும் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அனிமி நமது ஊரிலும் ஒரு அங்கமாக மாறிவிட்டதை இதன் மூலம் நாம் உணரலாம்.