நடிகை பிபாஷா பாசு சமீபத்தில் அளித்த பேட்டியில் மாதவனுடன் நடித்த அனுபவம் குறித்து நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.
’ஷூட்டிங்கில் முத்தமிடுவதற்கு முதல்நாள் இதயத்தில் மினி கார்டியாக் அரெஸ்ட்டே வந்துவிடுவதுபோல் இருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி பிரேக்கர்ஸ்’ ஷூட்டிங்கில் மாதவனை முத்தமிடும் காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு, முந்தைய நாள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படியோ நடித்துவிட்டேன். அப்போது, மாதவன் முதல் ஒட்டுமொத்த ஷூட்டிங் ஸ்பாட்டே சிரிப்பால் அதிர்ந்தார்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.