ஒருவழியாக வெளியாகிவிட்டது அஜித்தின் விடாமுயற்சி. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இது 1997ல் வெளியான Breakdown என்ற ஹாலிவுட் பட ரீமேக் என சொல்லப்பட்டது. படத்தின் டீசர், டிரெய்லர் கூட அதை உணர்த்தினாலும், படக்குழு சம்பந்தப்பட்ட யாரும் அதை பற்றி எதுவும் உறுதியாக சொல்லவில்லை. இப்போது படமே வெளியாகிவிட்டது. விடாமுயற்சி - Breakdown இடையேயான ஒற்றுமைகள் என்ன? Breakdownல் இல்லாத எதை எல்லாம் விடாமுயற்சியில் சேர்த்திருக்கிறார்கள்? பார்க்கலாம்...
ஒன்லைன் பொறுத்தவரை இரண்டிலுமே, மனைவியை கண்டுபிடிக்க கணவன் செய்யும் முயற்சிகள் தான் கதை. Breakdownல் இருந்த சில விஷயங்களும், விடாமுயற்சியில் உள்ளது, அதில் இல்லாத புது விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் படத்தின் சின்னச் சின்ன ஸ்பாய்லர்கள் இருக்கக் கூடும் என்பதால், படம் பார்க்காதவர்கள் மேற்கொண்டு வீடியோவை தொடர்வது உங்கள் விருப்பம்.
Breakdownல் ஜெஃப் (Jeff) - ஏமி (Amy) தம்பதி, Bostonல் இருந்து கிளம்பி புது வாழ்க்கையை துவங்கலாம் என San Diegoவுக்கு தங்களது காரில் செல்வார்கள்.
விடாமுயற்சியில் அஜித் - த்ரிஷா பயணத்திற்கு வேறு ஒரு காரணம் சொல்லப்பட்டிருக்கும். த்ரிஷா, அஜித்திடம் இருந்து, விவாகரத்து பெற முடிவு செய்திருப்பார். விவாகரத்திற்கு முன் தன் தந்தை வீட்டுக்கு செல்ல த்ரிஷா முடிவெடுக்க, அவரை அசர்பைஜானின் பாக்கு (BAKU) நகரத்தில் இருந்து, த்ரிஷாவின் ஊரான திப்லிஸ்-க்கு(TBILISI) அழைத்து செல்வார் அஜித்.
Breakdownல் வெறுமனே ஒரு தம்பதியின் பயணம் என இருந்ததை, விடாமுயற்சியில் அந்த தம்பதிக்கு ஒரு பின் கதையும், இருவருக்குமான காதலையும், பிரச்சனைகளையும் நான்-லீனியராக (Non Linear) திரைக்கதையில் சேர்த்திருந்தார் மகிழ் திருமேனி.
Gas Stationல் ஹீரோ காருக்கு பெட்ரோல், ஆயில் நிரப்ப, ஹீரோயின் ரெஸ்ட் ரூம் சென்று வரும் காட்சியே Breakdownல் இருக்கும்.
விடாமுயற்சியில் இதை கொஞ்சம் மாற்றி, ஹீரோயின் த்ரிஷா அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில், ஒரு தம்பதியை, அதாவது அர்ஜுன் -ரெஜினாவை சந்திப்பது போன்று ஒரு கூடுதல் காட்சி வைக்கப்பட்டிருக்கும்.
கார் Breakdown ஆகும் காட்சியின் போது, அந்த தம்பதிக்கு உதவ, அந்த வழியாக சென்ற ட்ராக்கில் இருந்து இருவர் வருவதாக விடாமுயற்சியில் இருக்கும்.
அதுவே Breakdown படத்தில் அந்த இரண்டாவது கதாப்பாத்திரம் கிடையாது. வெறும் டிரைவர் கதாப்பாத்திரம் மட்டும் தான், உதவ முன்வரும்.
இதற்கு அடுத்து காரின் வயர் சரி செய்வது தொடங்கி, போலீஸ் ஒருவருக்கு குண்டடி படுவது வரை இரண்டு படங்களிலும் பல விஷயங்களில் மாறுதல்கள் பெரிதாக இல்லை. ஆனால் அதற்குள் செய்யப்பட்ட சுவாரஸ்யமான மாற்றம் என்ன என்றால்,
Breakdownல் வில்லி வேடம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் வில்லனின் மனைவிக்கு, தன் கணவர் செய்யும் கிரிமினல் வேலைகள் எதுவுமே தெரியாது.
ஆனால் விடாமுயற்சியில் ஜோக்கர் - ஹார்லி குயின் ரேஞ்சில், வில்லன் மற்றும் வில்லிக்கு ப்ளாஷ்பேக் எழுதப்பட்டுள்ளது. அதிலும் வில்லி தன் மேனுப்ளேட்டிவ் (manipulative) திறமையை பயன்படுத்தி எதிராளியை குழப்பும் விதம் ஸ்பெஷல் அடிஷன்.
போலீஸுக்கு குண்டடி பட்ட பிறகு, Breakdownல் ஹீரோ, வில்லனின் இடத்துக்கு செல்கிறார் என படம் நேராக ப்ரீ க்ளைமாக்ஸுக்கு சென்றுவிடும். ஆனால் விடாமுயற்சியில் அதன் பிறகு தான் அதிரடி ஆக்ஷனே ஆரம்பிக்கும்.
”ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்” என அனிருத் இசை பின்னணியில் அலற, தன் மனைவி காணாமல் போனதற்கு காரணமான ஒவ்வொருவரையும் அடித்து நொறுக்குவார் அஜித். ஒவ்வொரு வில்லன்களையும் கண்டுபிடித்து இறுதியாக மெய்ன் வில்லனிடம் செல்வதே பெரிய டிராவலாக இருக்கும்.
எவ்வளவு நீளம் என்றால், Breakdownல் ப்ரீ க்ளைமாக்சில் டபுள் பேரல் துப்பாக்கி வைத்து வரக்கூடிய ஒரு காட்சி, விடாமுயற்சியில் படம் முடிவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிடும்.
இப்படித்தான் 93 நிமிட Breakdown படம், 2 மணிநேரம் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய `விடாமுயற்சி'யாக மாறியிருக்கிறது.
Breakdown படத்தில் வில்லன் குழுவுக்கு, பயணிகளிடம் இருந்து பணம் பறிப்பதே பிரதான நோக்கம். இது போல பலரிடம் இந்து கொள்ளையடிப்பது, அவர்களின் தடையமே இல்லாமல் செய்வது அவர்களின் முதன்மையான வேலை.
அதுவே விடாமுயற்சியில் பெண்களைக் கடத்தி, அவர்களுக்கு நெருங்கியவர்களிடம் பணம் பறிப்பது வில்லன்களின் ஒரு பணி என்றால், அதைத் தாண்டி வேறு ஒரு விஷயத்தையும் செய்யும் வில்லன் குழு. அது என்ன என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.