நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் திருமணங்கள் ஒரே மாதத்தில் நடிக்க இருப்பதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில், விஜய்யின் ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து வந்தார்.
இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் முடிந்துவிட்டது. திருமணம் நவம்பர் மாதம் ஜோத்பூரில் நடிக்க இருக்கிறது. இதற்காக பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் திருமணம் நடக்க உள்ள இடமான உமைத் பவன் அரண்ம னையை சமீபத்தில் சென்று பார்த்தனர்.
இந்நிலையில், பாலிவுட்டின் மற்றொரு காதல் ஜோடியான தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள முடி வு செய்துள்ளனர். நவம்பர் மாதம் 20 ம் தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது. அதே தேதியில்தான் பிரியங்கா சோப்ராவின் திருமணமும் நடக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
‘பிரியங்காவின் திருமண தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. நவம்பர் மாத கடைசியில் தான் அவர்கள் திருமணம் நடக்கிறது. ஆனால், நவம்பர் 20 ஆம் தேதியா என்பது தெரியாது’ என்று பிரியங்காவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே மாதத்தில் இரண்டு பெரிய பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணங்கள் நடைபெற இருப்பதால் பாலிவுட் இப்போது பரபரப்பாகி இருக்கிறது.