சினிமா

”மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு” - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

”மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு” - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

webteam

மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக , மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியால் தமிழகத்தில் திரையரங்குகள் நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வராமல் காத்திருப்பில் உள்ளன. இந்நிலையில் நடிகர் சூர்யா தான் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு திரைத்துறையில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் சூரரைப் போற்றுப் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகலாம் என பேசப்பட்டு வருகிறது.

 இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை விஜய் ரசிகர்கள் “விரைவில் முடியும் ஊரடங்கு மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு” என்ற வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை அப்பகுதியில் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.