ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதியக் கட்டுரை பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விவேக் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதியக் கட்டுரையில் தெரிவித்திருந்த கருத்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கட்டுரைக்கு பாரதிய ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆண்டாளை தவறாக பேசியுள்ள வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பெரும் எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விவேக் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது குறித்து விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் “ அனைத்து மத ஆன்மிக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும்.தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி.ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.யாரோ வெளி நாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது.கவிப்பேரரசு மன்னிப்புக் கேட்பதும்;அந்தப் பெருங் கவியை மன்னித்தலும் பண்பாடு” என்று பதிவிட்டுள்ளார். அதே போல், ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்திருப்பதை போல், வைரமுத்துவை கடுமையாக விமர்சித்த ஹெச் ராஜாவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.