சினிமா

"மீரா மிதுன் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" - விவேக்

"மீரா மிதுன் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" - விவேக்

webteam

நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு ரசிகர்களிடம் மீரா மிதுன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.

மீரா மிதுன், சமீப காலமாக சூர்யா, விஜய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நட்சத்திரங்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் மகேஷ்பாபு விடுத்த சவாலை ஏற்று மரக்கன்று நடும் புகைப்படத்தை நடிகர் விஜய் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் அதற்கு பெரும் பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில், வீட்டுக்குள் மரம் நடுவதால் எந்தப் பயனும் இல்லை எனவும் நடிகர் விவேக்கைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் எனவும் விஜய்க்கு எதிரான வகையில் மீரா மிதுன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டு நபர்களை ஒப்பிடுவது தவறானது எனக் குறிப்பிட்டுள்ள விவேக், அதற்காக விஜய் மற்றும் மகேஷ்பாபுவின் ரசிகர்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.