சினிமா

உலக சாதனையை நோக்கி விவேகம் டீசர்

webteam

அஜித் நடித்த விவேகம் பட டீசர் உலக அளவில் சாதனை படைக்க உள்ளது.

சிவா இயக்கத்தில் திரைக்கு விவேகம் படம் திரைக்கு வந்த 3 வாரங்களை கடந்து விட்டது. இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதும்  இப்படத்தின் டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விவேகம் படத்தின் டீசர்தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்திருந்தது. முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்திருந்தது. இந்நிலையில் விவேகம் படத்தின் டீசரை இதுவரை 2 கோடியே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 5 லட்சத்து 55 ஆயிரம் பேர் இதுவரை லைக் செய்துள்ளனர். 

இதன் மூலம் அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையை விவேகம் டீசர் முறியடிக்க உள்ளது. ஸ்டார்வார்ஸ் திரைப்பட டீசர் 5 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகளுடன் முதலிடத்திலும், 5 லட்சத்து 55 ஆயிரம் லைக்குகளுடன் விவேகம் டீசர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அவென்ஜர்ஸ் திரைப்படம் 5, லட்சத்து 25 ஆயிரம் லைக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

மேலும், 16 ஆயிரம் லைக்குகளை பெற்றால் விவேகம் பட டீசர் உலக சாதனை நிகழ்த்தும். இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த திரைப்படங்களில் உலக சாதனை படைத்த முதல் டீசர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளது.