சினிமா

பாகுபலியை விஞ்சிய விவேகம்.. பிரபல கிரிக்கெட் வீரர் உற்சாகம்!

பாகுபலியை விஞ்சிய விவேகம்.. பிரபல கிரிக்கெட் வீரர் உற்சாகம்!

webteam

அஜித் நடித்துள்ள விவேகம் படம் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ள நிலையில், முன்னணி கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் நாளே படத்தை பார்த்து ரசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விவேகம் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டபோதும், பெரும் பணம் கொடுக்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல திரையரங்குகளில் முன்பதிவு சில தினங்களுக்கு முன்பே முடிந்து விட்டன. இந்நிலையில் முதல்நாள் முதல்காட்சியை பார்த்து ரசிக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “சென்னையில் பெரும் கூட்டத்திற்கு இடையில் நாளை விவேகம் படத்தை திரையரங்கில் பார்க்க இருக்கிறேன். விவேகம் படம் வெளியாவதால் அஜித் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய நாளாக அமையும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிக்கெட் முன்பதிவில் பாகுபலி-2 சாதனையை விவேகம் படம் முறியடித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.