சிவா இயக்கத்தில் விவேகம் படத்தின் டப்பிங் பணிகள் ஐதராப்பத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றே நாட்களில் டப்பிங் பேசி தனது ஃபோர்சனை முடித்திருக்கிறார் அஜீத். டப்பிங் பணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. தற்போது விவேகத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 10ம்தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது பாடலின் ஆடியோ நேற்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இதுவரை யூடிப்பில் அப்பாடலை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.