சினிமா

விவேகம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நண்பர்கள்!

விவேகம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நண்பர்கள்!

webteam

பால்ய சிநேகிதர்களான இயக்குநர் சிவாவும், பாடலாசிரியர் ராமஜோகய்யா சாஸ்திரி தரிவெமுலாவும் விவேகம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.  
தெலுங்கில் பிரபல பாடலாசிரியாரக வலம் வரும் ராமஜோகய்யா சாஸ்திரி தரிவெமுலாவும், இயக்குநர் சிவாவும் சிறுவயது நண்பர்கள். இருவரும் திரைத்துறையில் இருந்தபோதும், தொடர்புகொண்டு பேசிக்கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் விவேகம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். விவேகம் படத்திற்காக அப்படத்தின் இயக்குநர் சிவா தமிழில் எழுதிய தலை விடுதலை பாடலை தெலுங்கு வெர்ஷனுக்காக ராமஜோகய்யா சாஸ்திரி தரிவெமுலா எழுதியுள்ளார். 
இதுகுறித்து ராமஜோகய்யா சாஸ்திரி தரிவெமுலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விவேகம்  ’தலை விடுதலை’ தெலுங்கு பாடலில் இயக்குநர் சிவாவுடன் பணியாற்றியுள்ளேன். இதன் மூலம் மீண்டும் எனது நல்ல பழைய நண்பருடன் இணைந்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.