கொலமாஸ் விஸ்வாசம் டிரைலர் ஆன் தி வே என அப்படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் தன் ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் டிரைலரின் எடிட்டிங் படங்களையயும் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா ‘வீரம்’,‘வேதாளம்’,‘விவேகம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதற்கிடையே ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி முதன்முறையாக அஜீத் படம் ரஷ்யாவில் வெளியாகிறது. அங்கு, ரஜினியின் ’கபாலி’, ’2.0’, விஜய்யின் ’சர்கார்’ படங்கள் ஏற்கெனவே ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் ’2.0’ படத்தை ரஷ்யாவில் வெளியிட்ட பிரசாந்த், ’விஸ்வாசம்’ படத்தை ரஷ்யாவிலும் உக்ரைனிலும் வெளியிடுகிறார்.
இதனையடுத்து பேட்ட படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அஜித் ரசிகர்கள், விஸ்வாசம் அப்டேட் இல்லையா என ஏங்கியிருந்தனர். இன்னும் பல ரசிகர்கள் ஜனவரி 10-க்கான முதல் நாள் காட்சி டிக்கெட்டை கூட வாங்கிவிட்டனர். ஆனால் விஸ்வாசம் டிரைலர் கூட வரவில்லை என சமூக வளைத்தலத்தில் ஸ்டேடஸ்கள் தெறிக்கவிட்டனர். இப்படியாக வறண்டு போயிருந்த அஜித் ரசிகர்களுக்கு குளு குளு செய்தியை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "கொலமாஸ் டிரைலர் ஆன் தி வே" என தெரிவித்து மகிழ்வித்துள்ளார்.