சினிமா

நாளை வெளியாகிறது விஸ்வாசம் டிரைலர்

நாளை வெளியாகிறது விஸ்வாசம் டிரைலர்

webteam

அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாக உள்ளதாக
படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா ‘வீரம்’,‘வேதாளம்’,‘விவேகம்’ ஆகிய மூன்று படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன்
4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு
உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை
நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் பாடல்கள் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதற்கிடையே ஜனவரி
10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி முதன்முறையாக அஜீத் படம் ரஷ்யாவில் வெளியாகிறது. 

ஜனவரி 10-க்கான முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டை கூட வாங்கிவிட்டோம் ஆனால் விஸ்வாசம் டிரைலர் கூட வரவில்லை என
சமூக வளைத்தலத்தில் ஸ்டேடஸ்கள் தெறிக்கவிடப்பட்டன.

இந்நிலையில், அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு
வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.