சினிமா

அஜித்தின் ‘விசுவாசம்’படத்திற்கு எடிட்டர் கன்ஃபார்ம்

அஜித்தின் ‘விசுவாசம்’படத்திற்கு எடிட்டர் கன்ஃபார்ம்

webteam

  ‘விசுவாசம்’ படத்தின் எடிட்டர் யார் என்பது கன்ஃபார்ம் ஆகியிருக்கிறது.

‘சிறுத்தை’ சிவாவுடன் அஜித் மறுபடியும் இணையும் திரைப்படம் ‘விசுவாசம்’. அடுத்தடுத்து சிவாவுக்கே வாய்ப்பை அஜித் தொடர்ந்து அள்ளி வழங்கி வருவதால் செண்ட்டர் ஆஃப் த தமிழ் சினிமாவாக இயக்குநர் சிவா இருந்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய இரு படங்களிலும் எடிட்டராக பணியாற்றிய ரூபனே இந்தப் புதிய படத்திற்கு எடிட்டராக ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆகவே தொடர்ந்து அஜித்தின் மூன்று படங்களுக்கு இவரே எடிட்டராக வேலை பார்க்க இருக்கிறார். 

இந்நிலையில் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.