சினிமா

விரைவில் விஸ்வரூபம் 2 ட்ரெய்லர்

விரைவில் விஸ்வரூபம் 2 ட்ரெய்லர்

webteam

விரைவில் விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக, அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படம், கடும் சர்ச்சையைச் சம்பாதித்தது. அதனை அடுத்து அப்படம் வெளியாகுமா? ஆகாதா என கேள்வி எழும்பியது. அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதன் அடுத்த பாகத்தை எடுக்க கமல் முடிவு செய்தார். இப்படத்தின் பாதி படப்பிடிப்பு முதல் பாகத்தின் போதே எடுக்கப்பட்டுவிட்டன. மேலும் சில பகுதிகளை எடுத்து சேர்க்கும் நிலை மட்டுமே இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் சிக்கலால் வேலைகள் தாமதமாகின. இந்நிலையில் சில மாதங்கள் முன்பு மீண்டும் அதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஆண்ட்ரியா, பூஜாமுமார் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் அதன் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்திர்ந்த நிலையில் அவர் மீண்டும் படம் நடிக்கச் சென்றுவிட்டார். கமல் அரசியல் பிரவேசம் செய்துவிட்ட நிலையில், அவரது படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. அரசியலிலும், சினிமாவிலும் அடுத்தடுத்த காய்களை ரஜினியும், கமலும் தொடர்ந்து நகர்த்தி வருகின்றனர். இந்தப் போட்டியால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.