ஹிந்துஸ்தானி இசையில் கமல் புலமை மிக்கவர் என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் இசைக்குப் பிறகு கமல் அதிகம் விரும்பி வேலை செய்யும் இசையமைப்பாளராக ஜிப்ரான் இருக்கிறார். பல இடங்களில் கமல் இவரது திறமையை புகழ்ந்து பேசியுள்ளார். ‘வாகை சூட வா’ படத்தில் ‘சரசர சார காத்து’ பாடலை மிக அழகாக இசையமைத்துள்ளதாக கமல் குறியிட்டிருந்தார். ஆகவே தனது பாபநாசம் படத்தில் ஜிப்ரானுக்கு வாய்ப்பளித்திருந்தார். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கமல் கர்நாடிக் பாடல் ஒன்றை பாடிக் கொடுத்துள்ளார். இதுபற்றி ஜிப்ரான் “கமல் சார் கர்நாடிக் மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் புலமை பெற்றிருக்கிறார்”என்று கூறியிருக்கிறார்.
பொதுவாக கமல் தன் படங்களில் பாடும் பாடல்கள் பெரிய அளவுக்கு ஹிட் ஆகிவிடும். அதை போலவே இந்தப் பாடலும் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பாக்கப்படுகிறது. ’விஸ்வரூம்2’வின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் தயாரிப்பாளருடனான சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.