சினிமா

ஜுவாலா கட்டாவுக்கு நிச்சயதார்த்த மோதிரம்? பிறந்த நாளில் விஷ்ணு விஷால் காதல் பரிசு

webteam

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாக இருக்கிற காதலியான பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கு பிறந்தநாள் பரிசாக நிச்சயதார்த்த மோதிரத்தை அளித்துள்ளதாக டைம் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.



"நான் இதை முன்பே செய்யத் திட்டமிட்டேன். இன்று அவரது பிறந்த நாள். நேற்று இரவு 11.30 மணிக்கு அவருக்கு ஆச்சரியம் தர நினைத்தேன். இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரை அழைத்தேன். எனக்கு ஒரு மோதிரம் தேவை என்று தெரிவித்தேன். அவர் கொடுத்தது நிச்சயதார்த்த மோதிரம் போலத் தெரியவில்லை" என்று விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.

ஜுவாலாவின் ரியாக்சன் என்ன? என விஷ்ணுவே விவரிக்கிறார், "அவர் சற்று அதிர்ச்சியடைந்தார். ஆனால் நான் நன்றாக ஆச்சரியப்படுத்தவில்லை. அவருக்கு அதில் மகிழ்ச்சிதான். இருவரும் எங்களுடைய உறவை முன்னோக்கி எடுத்துச் செல்வது பற்றியும், நிச்சயதார்த்தம் பற்றியும் பேசினோம். ஆனால் அவர், தன் பிறந்தநாளுக்கு முன்பே இது நடக்கும் என்று நினைக்கவில்லை. எங்களைச் சுற்றி குடும்பத்தினர் இல்லை. சில நண்பர்கள் மட்டுமே இருந்தார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளார்.