சினிமா

நண்பன் ஆர்யாவின் பெயரை குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்த விஷ்ணு விஷால்

webteam

நடிகர் விஷ்ணு விஷால் மகனுக்கு, தன்னுடைய நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமான ஆர்யாவின் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளார்.

விஷ்ணு விஷால்- ரஜினி நட்ராஜ் தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு ஆர்யன் என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள விஷ்ணு, என்னுடைய ராக் ஸ்டாருக்கு ஆர்யன் என்று பெயர் வைத்துள்ளேன் என பதிவிட்டுள்லார். இது நடிகர் ஆர்யாவின் மிகப்பெரிய ஆசை எனவும், அதை நிறைவேற்றியது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.