சினிமா

‘கும்கி2’ உண்மையா? : விஷ்ணு விஷால் விளக்கம்

‘கும்கி2’ உண்மையா? : விஷ்ணு விஷால் விளக்கம்

webteam

பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கும்கி2’ படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. அது சம்பந்தமாக ட்விட்டரில் நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபுசாலமன் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் யானை ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறது. ஆகவே இந்தப் படம் ‘கும்கி’யின் இரண்டாம் பாகமாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. இது சம்பந்தமாக விளக்கம் தரும் வகையில் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பிரபு சாலமன் இயக்கத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் ராணா டகுபதியும் நடிக்கிறார். 26 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்றைய படப்பிடிப்பு மூணாருவில் நடக்கிறது. இந்தப் படம் ‘கும்கி2’ இல்லை. இது ஒரு ரீமேக் படம். இதன் தலைப்பை விரைவில் வெளியிடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, இந்தப் படம் ‘கும்கி’யின் இரண்டாம் பாகம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.