சினிமா

இவங்கதான் ஜெயிச்சது: தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முழு விவரம்

இவங்கதான் ஜெயிச்சது: தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முழு விவரம்

webteam

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் முழு விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தலைவர் பொறுப்பில் இருந்த எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடந்த தேர்தலில், கேயார், விஷால், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. மொத்தம் 27 பதவிகளுக்கு 103 பேர் மோதினார்கள். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்தினார். மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தலைவராக விஷால் வெற்றிபெற்றார்.

புதிய நிர்வாகிகள் பட்டியல் முழு விவரம்:

தலைவர்: விஷால், துணைத் தலைவர்கள்: கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ். செயலாளர்: கே.இ. ஞானவேல்ராஜா, கதிரேசன். பொருளாளர்: எஸ்.ஆர்.பிரபு. 21 செயற்குழு உறுப்பினர்கள்: சுந்தர்.சி, பார்த்திபன்,

பாண்டிராஜ், ஆர்.வி. உதயகுமார், மன்சூர் அலிகான், எஸ்.எஸ். துரைராஜ், ஆர்.கே. சுரேஷ், ஆர்யா, எஸ். ராமச்சந்திரன், ஜெமினி ராகவா, அபினேஷ் இளங்கோவன், எ.எல்.உதயா, எம். கஃபார், பிரவீன்காந்த், மனோஜ்குமார்,

பி.எல். தேனப்பன், எஸ்.வி. தங்கராஜ், கே. பாலு, எம்.எஸ். அன்பு, எஸ்.எஸ். குமரன், டி.ஜி. தியாகராஜன்.