சினிமா

லட்சுமிகரமான பெண்ணுடன் திருமணம்: விஷால் தகவல்!

லட்சுமிகரமான பெண்ணுடன் திருமணம்: விஷால் தகவல்!

webteam

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, சிம்ரன் நடிக்கும் படம், ‘துப்பறிவாளன்’.  இதன் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. 

விழாவில் விஷால் பேசும்போது, ‘நானும் இயக்குநர் மிஷ்கினும் 8 வருடமாக, இணைந்து பணியாற்ற காத்திருந்தோம். அது 'துப்பறிவாளன்' என்ற படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கினை எனக்கு பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். துப்பறிவாளன் படத்தில், என் கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளைப் பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் எனக்கு துப்பறிவாளன், முக்கியமான படம். நானும், பிரசன்னாவும் சிம்ரனின் ரசிகர்கள். அவரோடு இந்தப் படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி பிடித்துவிட்டது. நான் பைரசி வேலை செய்யும் நபர்களைக் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார், அவர்கள் தனி நபரா அல்லது குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிப்பேன். நான் காமராஜர் அய்யாவின் வழியில் நடப்பேன். ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன்’ என்றார்.  

விழாவில், தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் அரோல் கொரொலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், திரு, நடிகை சிம்ரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.