"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என நடிகர் விஷால் கர்நாடகாவில் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
புதிய கன்னட படமான "ரகுவீரா" ஆடியோ ரீலிஸ் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என தமிழில் பேச தொடங்கினார். மேலும், " நான் என் தாய்மொழியான தமிழில் பேசுவதில் பெருமை கொள்கிறேன். இதனை யாராலும் தடுக்க முடியாது. காவிரி நீர் என்பது தமிழக மக்களின் உரிமை. கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு தமிழர்களின் பாதுகாப்பையும் அங்குள்ள கன்னடர்கள் உறுதி செய்ய வேண்டும். அதனைபோல் தமிழ்நாட்டிலுள்ள கன்னடர்களின் உரிமையை அங்குள்ள தமிழர்கள் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் இந்தியர்கள்" என ஆக்ரோஷமாக விஷால் பேசியுள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் தாமதமாகவே பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.