சினிமா

தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் விஷால்.. ‘மார்க் ஆண்டனி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் விஷால்.. ‘மார்க் ஆண்டனி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சங்கீதா

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், நடிகர் விஷால் நடித்துள்ளப் படம் ‘லத்தி’. காவல்துறை சேர்ந்தவராக இந்தப் படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார் நடிகர் விஷால். சிம்புவின் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, பிரபுதேவாவின் ‘பஹீரா’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜம் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கதாநாயகி ரிது வர்மா நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். எஸ் வினோத்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் விஷாலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.