சினிமா

விஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு!

விஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு!

webteam

விஷால் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இரும்புத்திரை படத்தின் இரண்டாவது பாடல் ட்ராக் நாளை வெளியாகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் முதன்முறையாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் விஷால் இணைந்து நடிக்கின்றனர் இந்தப் படத்திற்கு ‘இரும்புத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளிவான இதன் டீசர் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தில் இருந்து ’யார் இவன்’ என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகியது. 

மேலும் விரைவில் படத்தின் இசை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை 6 மணிக்கு  படத்தில் இருந்து ‘அழகே’என்ற இரண்டாவது பாடல் ட்ராக் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் விஷாலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இரும்புத்திரை படத்தின் போஸ்டருடன் இத்தகவலை பதிவிட்டுள்ளார்.