தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சனம் செய்ததற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால், நடிகர் விஷாலை இடைநீக்கம் செய்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணையில், விஷால் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விஷால் தாக்கல் செய்த மனு தொடர்பாக செயற்குழு கூடி முடிவு செய்யும் என தயாரிப்பாளர் சங்க வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.