ஜூன் 23 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திரைபிரலங்கள் பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.