சினிமா

விஷாலின் புதிய மன்னர்கள்..?

Rasus

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் தங்கள் அணிக்கு 'புதிய மன்னர்கள்' என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். விஷால் நடிகர் சங்க நிர்வாகியாக இருப்பதால் அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே, தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷாலுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் அணியினர் தங்கள் அணிக்கு பாண்டவர் அணி என பெயரிட்டு அந்த தேர்தலில் வெற்றி வாகையும் சூடினர். இந்நிலையில், தற்போதும் அது போன்றே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்கள் அணிக்கு, ‘புதிய மன்னர்கள்’ என்று பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.